Saturday, September 10, 2011

முகவுரை!

இரு விழிகளின் ஓரம் இருண்ட மேகங்களாய் இமைகள் படபடக்க, இன்னொரு புயல்
இதயத்தின் வெகு அருகில் இன்னும் சில நிமிடம் இதுவும் கடந்துப் போகும்

 எனக்குத் தெரியும் அதிகாலைப் பொழுதுகளில் அவசரமாய் பூக்கும் பூக்கள் உன்... அந்த அழகின் சிரிப்பில் அதனருகே இருக்கும் முட்கள் அவ்வளவாய் தெரிவதில்லை.... உன் கோபம் அதிகாலை அவசரப் பூ...

கரைக் கட்டித் தெறித்து...முகம் முழுக்க நனைத்து..முத்தத்தால் என்னைப் புதைத்து...என்னைச் செல்லமாய் சீண்டி...என்னுள்ளே அனுமதியின்றி நீந்தி....உன் வாசனை என்னில் பூசி...தயக்கமின்றி என் தேகம் தீண்டி...நிலவின் வாசல்கள் திறந்து மொத்தமாய் கொடுத்தேன் முற்றிலும் நனைந்தேன்........இது எனக்குப் பிடித்திருக்கு....

ஈரம் சொட்ட நினைவுகளை வருடி கடமைகள் முடித்து வழிந்தோடும் வானத்தின் நீர்த் துளிகள், என் கவிதைகளோடு உன் நினைவுகள் சொல்லி சிதறும்! இன்னும் மிச்சமிருக்கிறது உன் நினைப்பு... நினைவுகளோடு ஒரு சந்திப்பு மௌனங்களின் ஆர்ப்பரிப்பு..

பூக்களின் புன்னகை பாதையின் ஓரமாய் கண்ணாடி ஓவியங்கள் காயங்களின் தோரணமாய் பொக்கிஷ்மாய் நினைத்ததெல்லாம் பொருட்டாய் தோன்றவில்லை… இன்னொரு குரல் இம்மியளவும் என்னை நிறுத்தவில்லை…உலகங்கள் மிஞ்சவில்லை உன் உளறகள் மட்டும் மிஞ்சியது.. என் அடையாளம் எனக்குத் தெரிய என் வாழ்தல் எனக்குப் பிடிக்க... இது எனக்குப் பிடித்திருக்கு....

உன் கண்களின் அருகில் இருண்ட மேகங்களாய் என் இமைகள் படபடக்க, இன்னொரு புயலாய் உன்..

உணர்வுகளின் வெகு அருகில் இன்னும் சில நிமிடம் இதுவும் கடந்துப் போகும்..இடியின் சத்தம் சத்தமின்றி போக... மின்னல் கீற்று உன் முகமாய் மாற சோவெனக் கொட்டும் மழை பிடிக்க... இது எனக்குப் பிடித்திருக்கு....

வீறாப்புகள் வீசிய காற்றில் வெட்டிக் கிடக்க கட்டியக் கோட்டைகள் உன் பார்வைக் சுட்டெரிப்புகளில் சுருங்கிச்ச் சரிய... உன் வெற்று பார்வைகளில் வெளிறிய காட்சிகள் பிடிக்க..

ஆகாயம் உருகி மழையாகி எனக்கெனப் பொழிய வீதியில் உயிர் வழியே உன் நினைவுகள் கசிய என் நிழல்களுக்கும் விரல்களுக்கும் அவளுக்கான இடைவெளி விட்டு நடக்கும் தனிமை பிடிக்க.. இது எனக்குப் பிடித்திருக்கு....

உன் பார்வைகளால் வர்ணஜாலம் போடும் வரை வெள்ளையாய் இருந்த என் மனது ரங்கோலியாவது பிடிக்க… உன் ஓணம் பண்டிகை கூட என்னுடன் ஊமையாக இது எனக்குப் பிடித்திருக்கு....

என் வாக்குமூலங்களைக் கேட்டுவிடுப் போ உன் வார்த்தைகளாலும் பாசங்களாலும்...கோபங்களால் கூட என்றாலும் பரவாயில்லை!!

வார்த்தைகள் தரும் வலிகள் தாண்டி உன் அமைதியின் அழகான கொலைகளும் உன் ஒருவார்த்தைக்கான என் ஒவ்வொரு தேடலும் இது எனக்குப் பிடித்திருக்கு....



2 comments:

Niroshanan said...

Nice one da :-)

A.Oly said...

A good read!Write more often :)

Post a Comment